பொது செய்தி

தமிழ்நாடு

புதர் மண்டிய மயான வளாகங்கள்; கிராமங்களில் மக்கள் அதிருப்தி

Added : டிச 31, 2020
Share
Advertisement
உடுமலை : உடுமலை ஒன்றிய கிராமங்களில், பயன்படுத்த முடியாமல், புதர் மண்டி காணப்படும் மயான வளாகத்தை துாய்மைப்படுத்தி, சுற்றுசுவர் கட்ட ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பல கிராமங்களில், மயானம் பராமரிப்பில்லாமல், உள்ளது. வளாகத்தில், முட்செடிகளும் வளர்ந்தும், பார்த்தீனியம் படர்ந்தும் உள்ளன. திறந்த

உடுமலை : உடுமலை ஒன்றிய கிராமங்களில், பயன்படுத்த முடியாமல், புதர் மண்டி காணப்படும் மயான வளாகத்தை துாய்மைப்படுத்தி, சுற்றுசுவர் கட்ட ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள பல கிராமங்களில், மயானம் பராமரிப்பில்லாமல், உள்ளது. வளாகத்தில், முட்செடிகளும் வளர்ந்தும், பார்த்தீனியம் படர்ந்தும் உள்ளன. திறந்த வெளிக்கழிப்பிடங்களாகவும் மாறியுள்ளன. மயானங்கள் பராமரிப்பில்லாமல் இருப்பதால், இறுதி சடங்குகள் செய்ய மக்கள் திணறி வருகின்றனர்.திறந்த வெளிக்கழிப்பிடங்களாக மாறியுள்ள மயானங்களில் வீசும் துர்நாற்றம் மக்களை, முகம் சுழிக்க வைக்கிறது. பராமரிப்பில்லாமல் இருப்பதால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், மயானங்களை பயன்படுத்துகின்றனர்.

திடக்கழிவு மேலாண் மை திட்டத்தில், உரம் தயாரிப்பதற்கான குடில்களும், பெரும்பான்மையான கிராமங்களில் மயானத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில், கழிப்பிடங்களை போல, மயானமும், பொதுமக்களுக்கான அடிப்படை வசதியாக உள்ளது. கிராமங்களில் சுகாதார வளாகம் அமைப்பதற்கு, அரசின் சார்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல், மயானங்களை பராமரிப்பதற்கும், சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் மயான சுற்றுச்சுவர்களை மேம்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X