பொள்ளாச்சி : 'குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை தவிர, மற்றவர்களிடம் கட்டணம் வசூல் செய்யும் முறையை ரத்து செய்ய வேண்டும்,' என, வால்பாறை வட்டார வியாபாரிகள் மற்றும் அனைத்து வணிகர்களின் அமைப்பு, தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு, கொடுத்து வனத்துறையினரிடம் வலியுறுத்தினர்.
வால்பாறை வட்டார வியாபாரிகள் மற்றும் அனைத்து வணிகர்களின் அமைப்பு, சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், ஆனைமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனரிடம் கொடுத்த மனு:வால்பாறையில் தமிழக அரசு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா வளர்ச்சிக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ஆழியாறு சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் அதிகமாக வசூல் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
அதே போல், வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கு வந்து செல்பவர்களிடமும் நுழைவு கட்டணம் வசூல் செய்கின்றனர். ஒவ்வொரு சுற்றுலா தள நுழைவு வாயிலில் கட்டணம் வசூல் செய்யும் முறை உள்ளது. குரங்கு அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை தவிர, மற்றவர்களிடம் கட்டணம் வசூல் செய்யும் முறை ரத்து செய்ய வேண்டும்.முதல் முறையாக வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தினாலோ, அறியாமையினால் செய்யும் சிறு தவறுகளை முதல் கட்டமாக எச்சரித்து அனுப்ப வேண்டும்.
சுற்றுலா பயணிகளிடம் எளிய முறையில் அறிவுரைகளை அறிவுறுத்த வேண்டும். ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்சி முனையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்.தொலை நோக்கி கருவிகளை அமைத்து காட்சி முனையை மேம்படுத்த வேண்டும். மானாம்பள்ளியில் வனத்துறை சார்பில், வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வனப்பகுதிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்து உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE