உடுமலை : அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான வானியில் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்க இலவசமாக பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 'இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாடிக்ஸ் ஏரோநாடிக்ஸ் அண்ட் ஏவியேஷன்' (ஐஏஏஏ) நிறுவனத்தின் சார்பில், சர்வதேச அளவிலான வானியல் போட்டி நடப்பாண்டு பிப்., மாதம் துவங்கி, அடுத்தாண்டு, பிப்., வரை நடக்கிறது.சர்வதேச அளவில் தேர்வு செய்யப்படும் பத்து போட்டியாளர்கள் ரஷ்ய நாட்டிற்கு வானியல் நிகழ்வு தொடர்பான பயிற்சி பெற அனுப்பப்படுகின்றனர். இப்போட்டி, குறிப்பாக, ஒன்பது முதல் பிளஸ் 1 வரை படிக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
போட்டியில், 'இஸ்ரோ' உட்பட பல்வேறு அமைப்புகளின், விஞ்ஞானிகளும் பங்கேற்று பயிற்சி பட்டறை நடத்துகின்றனர். போட்டியில் பங்கேற்க, பள்ளி நிர்வாகத்தினர் வாயிலாக, மாணவர்கள், இலவசமாக பதிவு செய்யலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, மாணவர்களை பதிவு செய்வதற்கு தலைமையாசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, https://www.iaaaindia.com/international-----astronomy-contest என்ற இணையதளத்தில், மாணவர்கள் பார்வையிடலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE