பொது செய்தி

தமிழ்நாடு

தனித்திறன் போட்டிகளில் பங்கேற்க தயக்கம்; மாணவர்களை ஊக்குவிக்க தேவை திட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
உடுமலை : தேசிய இளைஞர்கள் தினத்துக்கான, வீடியோ பதிவு முறையிலான, தனித்திறன் போட்டிகளில், உடுமலை பகுதியில், குறைந்தளவு மாணவ, மாணவியரே பங்கேற்றனர்.கொரோனா பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக, மார்ச் மாதம் முதல், பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் வீட்டில் உள்ளனர். பாடம் தொலைக்காட்சியிலும், ஆசிரியர்களோடு கலந்துரையாடல் ஆன்லைன் வழியாகவும் நடக்கிறது. வீட்டில், முடங்கிய,

உடுமலை : தேசிய இளைஞர்கள் தினத்துக்கான, வீடியோ பதிவு முறையிலான, தனித்திறன் போட்டிகளில், உடுமலை பகுதியில், குறைந்தளவு மாணவ, மாணவியரே பங்கேற்றனர்.

கொரோனா பாதிப்பு தடுப்பு முன்னெச்சரிக்கையாக, மார்ச் மாதம் முதல், பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் வீட்டில் உள்ளனர். பாடம் தொலைக்காட்சியிலும், ஆசிரியர்களோடு கலந்துரையாடல் ஆன்லைன் வழியாகவும் நடக்கிறது. வீட்டில், முடங்கிய, மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கவும், அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டமிட்டது.

அதன்படி, உடுமலை கல்வி மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி, மெய்நிகர் (virtual hybrid mode) முறையில் போட்டிகள் நடத்த அறிவிக்கப்பட்டது.இசை, பரதம், கிராமிய நடனம், உடை அலங்காரம், நாடகம், காட்சிக்கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டது.

இளைஞர்கள் அவர்களாக வீடியோ பதிவு செய்து, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணைய முகவரிக்கும், பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளிகளிலும் சென்று போட்டிகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால், உடுமலை கல்வி மாவட்டத்தில், பத்துக்கும் குறைவான மேல்நிலைப்பள்ளிகளில் மட்டுமே இப்போட்டிகள் நடந்தது; வீடியோ பதிவுக்கும், மாணவர்கள், ஆர்வம் காட்டவில்லை.

அரசு விதிமுறைகளை பின்பற்றி, போட்டிகளை நடத்துவதோடு, மாணவர்களை பங்கேற்பதற்கும் ஊக்குவிக்க வேண்டும். தனித்திறன்களை வெளிப்படுத்துவதற்காக மட்டுமின்றி, இச்சூழ்நிலையில், மாணவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்கான போட்டிகளில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க வேண்டியதும் ஆசிரியர்களின் கடமையாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X