பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் ஆருத்ரா தரிசனம்; நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

Added : டிச 31, 2020
Share
Advertisement
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தனஉடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மார்கழி மாதம் துவங்கியதையொட்டி, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. கோவில் வளாகத்தில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.தொடர்ந்து, நேற்று,

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன

உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், மார்கழி மாதம் துவங்கியதையொட்டி, சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. கோவில் வளாகத்தில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் சிவகாமி அம்மன் உடனமர் சிதம்பரேஸ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

தொடர்ந்து, நேற்று, அதிகாலையில் சுவாமிகளுக்கு, பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருநீறு, இளநீர், தேன், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் சுவாமிகளுக்கு, ஆருத்ரா தரிசனம் அபிேஷக பூஜை நடந்தது.

சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.போடிபட்டி, சூர்யா கார்டன் பகுதி காரிய சித்தி விநாயகர் கோவிலில் உள்ள ஐம்புலிங்கேஸ்வரர், மலையாண்டிபட்டிணம் சித்தநாதேஸ்வரர் சுவாமிகளுக்கும் ஆருத்ரா தரிசனம் விழா நடந்தது.சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில், அருள்பாலித்த சுவாமியை, திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.பொள்ளாச்சிபொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை சிவகாமி அம்மன் திருஊஞ்சல் உற்சவம் நடந்தது.

நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடராஜர் அபிேஷகம், ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், நடராஜர், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கவில்லை. கோவில் வளாகத்திலே வீதி உலா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின், பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெண் பக்தர்கள் மஞ்சள் சரடு வழங்கி வழிபாடு செய்தனர்.

நெகமம் அருகே, மாயாண்டீஸ்வரர், பழமை வாய்ந்த நித்தீஸ்வரர், தேவணாம்பாளையம் ஆற்றங்கரை அம்மணீஸ்வரர் கோவில், கரப்பாடி அம்மணீஸ்வரர் கோவில், குருநல்லிபாளையம் காலபைரவர் கோவில், பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவில்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X