வால்பாறை : வால்பாறை அருகே, காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி இறந்தார்.
வால்பாறை அடுத்துள்ள நல்லகாத்து எஸ்டேட், 44 நெம்பர் தேயிலை காட்டில் நேற்று காலை, 15 தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டுசோலையில் யானைகள் முகாமிட்டது தெரியாமல் தொழிலாளர்கள் வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, திடீரென்று வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த யானை, தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை விரட்டியது.அப்போது, கால் தவறி விழுந்த ஜெயமணி,56, என்ற தொழிலாளியை யானை மிதித்தது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், யானைகளை அங்கிருந்து விரட்டி, தொழிலாளியின் உடலை மீட்டு, பிரோத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அலட்சியத்தால் விபரீதம்யானைகள் முகாமிடும் பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க அனுமதிக்க வேண்டாம், என, வனத்துறையினர் தொடர்ந்து எஸ்டேட் நிர்வாகங்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்தும், அந்தப்பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்கும் பணியில், எஸ்டேட் நிர்வாகம் ஈடுபடுத்தியதால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE