தமிழ்நாடு

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற புது நம்பிக்கை! தேர்தல் ஆண்டில் மாவட்டம் எதிர்பார்ப்பு

Added : டிச 31, 2020
Share
Advertisement
- நிருபர் குழு -பொள்ளாச்சியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள், அறிவிக்கப்பட்டு நிலுவையிலுள்ள திட்டங்களை வரும் ஆண்டில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் பொள்ளாச்சி, விவசாயம், இயற்கை சூழல், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதியில் தனிச்சிறப்பு

- நிருபர் குழு -

பொள்ளாச்சியை தலைமையாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டு, பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள், அறிவிக்கப்பட்டு நிலுவையிலுள்ள திட்டங்களை வரும் ஆண்டில் நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் அங்கம் வகிக்கும் பொள்ளாச்சி, விவசாயம், இயற்கை சூழல், விவசாயம் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதியில் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. மாநிலத்தில் அதிக தென்னை சாகுபடி பரப்புள்ள பகுதியாக விளங்குகிறது. இதனால், தென்னை சார்ந்த நார் தொழிற்சாலைகள், கொப்பரை உற்பத்தி அதிகமுள்ளது.

பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.மேலும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால், ஆழியாறு, டாப்சிலிப், வால்பாறை என, சுற்றுலா சார்ந்த பகுதிகளும் அதிகம் உள்ளன. விவசாயம், தொழில், சுற்றுலா, தொழில் போன்றவற்றில், யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக வளர்ந்து, முன்னேற்ற பாதையில் செல்கிறது பொள்ளாச்சி.

ஆனால், பொள்ளாச்சியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில், ஒப்பந்தம் புதுப்பித்தல், ஆனைமலையாறு, நல்லாறு அணைகள் கூடுதலாக கட்டும் திட்டங்கள் நீண்ட காலங்களாக நிலுவையில் உள்ளன. தமிழக, கேரள இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தியுள்ள நிலையில், இந்தாண்டு சுமூக தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோன்று, கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி பகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து உடுமலை பகுதிகளையும் பிரித்து, புதிதாக பொள்ளாச்சி மாவட்டம் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கான, கருத்துரு அரசு மட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில், மயிலாடுதுறை மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொள்ளாச்சி மாவட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேபோன்று, நார் தொழிலை மேம்படுத்தும், ஒருங்கிணைந்த தென்னை நார் வணிக வளாகம், கிளஸ்டர் திட்டங்களும் கிடப்பில் உள்ளன. தென்னை வளர்ச்சி வாரியம் கோவை அல்லது பொள்ளாச்சிக்கு கொண்டு வர வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட கால கனவை நினைவாக்க வேண்டும்.வால்பாறையில், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடக்கின்றன. பொள்ளாச்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவலால், இந்தாண்டு அனைத்து பணிகளும் ஒன்பது மாதங்களாக முடங்கின.இந்நிலையில், வரும் ஆண்டில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பொள்ளாச்சிக்கான பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், அறிவிக்கப்பட்டு நிலுவையிலும், செயல்பாட்டிலும் உள்ள திட்டங்களை வேகப்படுத்தி, பொள்ளாச்சியை பொலிவு பெற செய்ய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஒரே ஆறுதல்!பொள்ளாச்சியில் இந்த ஆண்டின் ஒரே ஆறுதலான விஷயமாக, ரோடுகள் விரிவாக்க பணி நடக்கிறது.

பொள்ளாச்சி - கோவை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, அனைத்து சாலைகளும் விரிவுபடுத்தப்பட்டு, முக்கிய சந்திப்புகள் மேம்படுத்தப்படுகின்றன. பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிந்து, அனைத்து ரோடுகளையும் மேம்படுத்தினால், வாகனங்களின் பயணம் நிம்மதியாக இருக்கும். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிடல் அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X