வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களும், அதன் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் டிச., 18ல் சென்னையில் ஒருநாள் அடையாள உண்ணா நிலைப் போராட்டம். விவசாயிகள் கோரிக்கை வெற்றி பெற என்றும் துணை நிற்போம்.
ஸ்டாலின், தி.மு.க., தலைவர் , தி.மு.க.,
தலைவர் ஸ்டாலினுக்கு பயம் வந்துவிட்டதால் ஆன்மிகம், விவேகானந்தர் என்றெல்லாம் பேசுகிறார். கடவுள் இல்லை என்று இனியும் சொன்னால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் என ஸ்டாலினுக்கு தெரிந்து விட்டது. தி.மு.க., வின் இரட்டைவேடத்தையும் போலித் தனத்தையும் தமிழக மக்களுக்கு எடுத்துச்சொல்லி புரிய வைக்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது.முருகன், தமிழக பா.ஜ., தலைவர்இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலர் கூட பெண் இல்லை.
கமல், ம.நீ.ம., தலைவர்
அம்பானி, அதானிக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு விரோதமாகவும் மக்கள் விரோத அரசை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அதனால்தான் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் 19 நாட்களாக போராடி வருகிற விவசாயிகளை அழைத்து பேசுகிற குறைந்த பட்ச ஜன நாயக உணர்வு இல்லாதவராக இருக்கிறார்.கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 20 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமதாஸ், பா.ம.க., நிறுவனர்
மெரினா_கடற்கரை திறப்பு என்பது மக்கள் நலன் கருதியே. எனவே பொதுமக்கள் கொரோனா பரவலை மனதில் வைத்துக்கொண்டு முன்னெச்சரிக்கையோடு தமிழக அரசின் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.வாசன், த.மா.க
- தலைவர் ,ஜெயலலிதா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அ.ம.மு.க., வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தினகரன், அ.ம.மு.க., பொது செயலர் மனுச்சட்டம் எங்கே உள்ளது என்று கேட்பவர்கள் பா.ஜ., எம்.பி., பிரக்யா தாகூரின் பேச்சைக் கவனிக்கவும்.
இவரை இப்படி பேசவைப்பதற்கு எது காரணம் என்ன பின்னணி மனுநுாலின் தாக்கம் எந்த அளவுக்கு சனாதனவாதிகளை இன்றும் ஆட்டிப்படைக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.திருமாவளவன், வி.சி., தலைவர்திண்டுக்கல்லில் முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உட்பட தோழர்களை கீழே தள்ளி, பின் கைது செய்துள்ளனர். இத்தகைய அடக்குமுறை மூலம் விவசாயிகள் போராட்டத்தை முடமாக்கி விட நினைத்தால் அது ஆட்சியாளர்களின் பகல் கனவாகவே முடியும்.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாநில செயலர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE