திருப்பூர் : பொங்கல் பரிசு வழங்கும் பணியை முறையாகவும், விரைவாகவும் மேற்கொள்ள உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா, 2500 ரூபாய்; ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு, திராட்சை முந்திரி, ஏலக்காய் அடங்கிய பரிசுப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொருட்கள் வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் விஜயகார்த்தி கேயன் தலைமை வகித்தார். வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட வழங்கல் துறை, பொது வினியோக திட்டம், மாநகராட்சி, கூட்டுறவு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.பயனாளிகளுக்கு, 'டோக்கன்' வழங்குதல், பரிசு பொருள் முறையாக 'பேக்கிங்' செய்து தயார்படுத்துதல், ரொக்க பணத்தை வெளிப்படையாக வழங்குதல், உரிய ரேஷன்கார்டுகளுக்கு குடும்ப உறுப்பினர் வருகை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
சம்மந்தமில்லாத நபர்கள் மூலம் டோக்கன் மற்றும் பொருள் வழங்குவது கட்டாயம் தவிர்க்க வேண்டும். துறை அலுவலர்கள் இது குறித்து உரிய கண்காணிப்பு நடத்தி புகார்கள் ஏற்படாத வகையிலும், கார்டுதாரர்கள் விடுபடாத வகையில், பொங்கல் பரிசு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு அறிவித்தவாறு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டோக்கன் வழங்கப்பட்டு, பரிசுப்பை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரை வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE