பொது செய்தி

தமிழ்நாடு

1,800 டன் நிலக்கடலை விற்பனை

Added : டிச 31, 2020
Share
Advertisement
அவிநாசி : சேவூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடப்பு சீசனில், 1,800 டன் நிலக்கடலை விற்கப்பட்டுள்ளது.அவிநாசி அருகே, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதிவாரம் திங்களன்று, நிலக்கடலை ஏலம் நடக்கும். அவிநாசி, சேவூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, நீல கிரி மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள், ஏல மையத்துக்கு,

அவிநாசி : சேவூர், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நடப்பு சீசனில், 1,800 டன் நிலக்கடலை விற்கப்பட்டுள்ளது.

அவிநாசி அருகே, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பிரதிவாரம் திங்களன்று, நிலக்கடலை ஏலம் நடக்கும். அவிநாசி, சேவூர், புளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபி, நீல கிரி மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள், ஏல மையத்துக்கு, நிலக்கடலை எடுத்து வருவர்.பொதுவாக, ஆக., மாதம் துவங்கி அக்., மாதம் வரை நிலக்கடலை சீசன் களைகட்டும்.

2019 ஏப்., முதல் டிச., மாதம் வரை, 1,712 மெட்ரிக்., டன் நிலக்கடலை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏல விலை அதிகபட்சம், கிலோவுக்கு, 75 முதல், 78 ரூபாய் வரை விற்கப்பட்டது. 10 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்தது.இந்தாண்டு, ஏப்., முதல், இம்மாதம் வரை, 1,800 மெட்ரிக் டன், நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம், 8 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.கடந்தாண்டை விட, இந் தாண்டு வரத்து அதிகரித்த போதிலும், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பு, வழக்கமான கேரள மார்கெட்டில் ஏற்பட்ட தேவை குறைவு போன்ற காரணங்களால், நிலக்கடலை தேவை அதிகரிக்கவில்லை. இதனால், விலையும் சரிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X