சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் தொழிலாளருக்கு கஞ்சா 'சப்ளை'; போலீசார் விசாரணையில் 'திடுக்' தகவல்

Added : டிச 31, 2020
Share
Advertisement
அவிநாசி : அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா சப்ளை செய்வது, அதிகரித்துள்ளது என்ற தகவல், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.அவிநாசி அருகே தெக்கலுார் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சா வியாபாரியை அடையாளம் கண்ட போலீசார், அவரை தொடர்பு கொண்டு, ஒரு கிலோ கஞ்சா

அவிநாசி : அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில், வட மாநில தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கஞ்சா சப்ளை செய்வது, அதிகரித்துள்ளது என்ற தகவல், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

அவிநாசி அருகே தெக்கலுார் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கஞ்சா வியாபாரியை அடையாளம் கண்ட போலீசார், அவரை தொடர்பு கொண்டு, ஒரு கிலோ கஞ்சா தேவை எனக்கூறி வரவழைத்துள் ளனர். பல்சர் பைக்கில் வந்த கஞ்சா விற்று வருபவரை, போலீசார், கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:பிடிப்பட்ட வாலிபர், தெக்க லுார் அரசு பள்ளி அருகே வசிக்கும், லோகநாதன், 31. மனைவியுடன் வசிக்கும் அவர், வேலைக்கு செல்வதாக காலையில் கிளம்பி சென்று, இரவில் தான் வீடு திரும்புவார். ஆனால், கஞ்சா விற்பதை தான், ஒரு தொழிலாகவே கொண்டுள்ளார்.மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் இருந்து, 8 கிராம், 200 ரூபாய் என வாங்கி வரும் அவர், 350 - 400 ரூபாய்க்கு விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக, பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் மட்டுமின்றி, 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் கூட, இவரிடம் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.கைது செய்யப்பட்ட லோகநாதன், ஸ்டேஷன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இளைய சமுதாயம் சீரழிவதை தவிர்க்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X