பல்லடம் : பல்லடம் ஒன்றியத்தில், தனிநபர் ரேஷன் கார்டு கேட்டு கிராம மக்கள் மனு அளித்தனர்.
போலி ரேஷன் கார்டுகளை கண்டறியும் முயற்சியாக, 2018ல் தனிநபர் ரேஷன் கார்டுகள் கணக்கெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் தகுதியற்ற தனிநபர் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது, பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் பலர், தனிநபர் ரேஷன் கார்டு கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், வசித்து, குடும்பத்தினரை இழந்து தனியாக உள்ளோம்.
பல ஆண்டாக ரேஷன் கார்டு இன்றி சிரமப்படுகிறோம். முதியோர் உதவி தொகையும் இல்லாமல், ரேஷன் கார்டும் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்.கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் குறைந்த வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்த சிரமப்பட்டு வருவதால், எங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கோரிக்கை மனுவை பெற்ற பல்லடம் வட்ட வழங்கல் அலுவலர் ரேவதி, 'உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE