திருப்பூர் : 'ஆடை உற்பத்தியாளர்கள், மூலப்பொருட்களுக்கான தொகை, ஜாப் ஒர்க் கட்டணங்களை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும்,' என, 'சைமா' சங்க தலைவர் பேசினார்.
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) 64வது பொதுக்குழு கூட்டம், திருப்பூர் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அரங்கில் நேற்று நடந்தது.சங்க தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பொதுசெயலாளர் பொன்னுசாமி, ஆண்டறிக்கை வாசித்தார். துணை தலைவர் கோவிந்தப்பன், வரவு செலவு கணக்கு தாக்கல் செய்தார்.
'சைமா' சங்க தலைவர் ஈஸ்வரன் பேசியதாவது:உடனடியாக தொகை கிடைப்பது; கிலோவுக்கு 20 ரூபாய் வரை கூடுதல் விலையால், தமிழக நுாற்பாலைகள் சில, நுால் ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றன; இதை குறைகூற இயலாது.ஆனாலும், உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் நுால் வழங்கப்படுகிறது; தொகை வழங்க இழுத்தடிக்கும் நிறுவனங்களுக்கு, நுால் மறுக்கப்படுகிறது.ஆடை உற்பத்தி துறையினர், நாணயமாக நடந்துகொள்ளவேண்டும். நுால் மற்றும் அனைத்து ஜாப்ஒர்க் கட்டணங்களையும், உடனடியாக வழங்கிவிட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.காரசார விவாதம்சங்க முன்னாள் இணைச்செயலாளர் தாமோதரன், 'எழுத்துப்பூர்வமாக கேட்டும், கடந்த ஆறு செயற்குழு தீர்மான விவரங்கள் வழங்காதது ஏன்; தற்போது அந்த தீர்மானங்களை படியுங்கள். கடந்த 2015 ல், சங்க பைலா திருத்தப்பட்டது. ஆனால், பைலா புத்தகத்தில் திருத்தம் இடம்பெறாதது ஏன்,' என, கேள்விகள் எழுப்பினர்
.'செயற்குழு தீர்மானங்களை, சங்க பதிவேட்டில் பார்வையிட்டிருப்பீர்கள் என நினைத்தோம். முந்தைய தீர்மானங்களை, இப்போது படிக்க இயலாது. திருத்தங்களுடன் கூடிய, புதிய பைலா புத்தகம் தயாரிக்கப்படும்,' என, நிர்வாகிகள் பதில் அளித்தனர்.இந்த பதிலை ஏற்காத அவர், 'செயற்குழு தீர்மான விவரங்களை வழங்க மறுப்பது ஏன்,' என, உரத்த குரலில், மீண்டும்மீண்டும் கேள்வி எழுப்பினர்; இதையடுத்து, நிர்வாகிகள் - முன்னாள் இணை செயலாளர் இடையே, காரசார விவாதங்கள் நடந்தன.ஆடிட்டர் லோகநாதன், சங்க இணை செயலாளர்கள் சசி அகர்வால், ஆனந்தன். பொருளாளர் ராமசாமி, வக்கீல் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE