திருப்பூர் : காமராஜ் ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் குப்பை தொட்டி வைத்துள்ளதால் பல தரப்பினரும் அவதிக்குள்ளாகின்றனர்.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ள காமராஜ் ரோட்டில், பறக்கும் பாலம் அமைந்துள்ளது. இதன்கீழ், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் பலரும் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்கின்றனர். பஸ் ஏற இறங்க வரும் பயணிகள், வாகனங்கள் நிறுத்தி விட்டு கடைகள், அலுவல் பணியாக செல்வோர் பலரும் இந்த பகுதியை பயன்படுத்துகின்றனர்.பாலத்தின் கீழ் மாநகராட்சி சார்பில், இரண்டு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
அருகேயுள்ள ஓட்டல் மற்றும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளில் சேகாரமாகும் எச்சில் இலை, உணவு மீதங்கள் உள்ளிட்டவற்றை இங்கு கொட்டுகின்றனர்.குப்பை முறையாக அகற்றப்படாமல் பல நேரங்களில் நிரம்பி வழிகிறது. கழிவுகள் காற்றில் பறந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே, மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன நெரிசல் அதிகமுள்ள இந்த ரோட்டில் குப்பை தொட்டியை அகற்றி, வேறிடத்தில் வைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE