சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி இயக்கம்; 3 நிறுவனத்துக்கு 'பவர் கட்'

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருப்பூர் : அனுமதி இன்றி இயங்கியதோடு, கழிவையும் வெளியேற்றி, இயற்கையை பாழ்படுத்திவந்த வாஷிங் நிறுவனம் மற்றும் இரண்டு ஓ.இ., மில்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், அனுமதி பெறாத மற்றும் விதிமுறை மீறும் நிறுவனங்கள் குறித்து தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இடுவம்பாளையத்தில், சந்திரமோகன் என்பவர், ஸ்ரீ

திருப்பூர் : அனுமதி இன்றி இயங்கியதோடு, கழிவையும் வெளியேற்றி, இயற்கையை பாழ்படுத்திவந்த வாஷிங் நிறுவனம் மற்றும் இரண்டு ஓ.இ., மில்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், அனுமதி பெறாத மற்றும் விதிமுறை மீறும் நிறுவனங்கள் குறித்து தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.இடுவம்பாளையத்தில், சந்திரமோகன் என்பவர், ஸ்ரீ விக்னேஸ்வரா டெக்ஸ்டைல் பிராசசிங் என்கிற பெயரில், வாஷிங் நிறுவனத்தை இயக்குகிறார்.

இந்நிறுவனம், மாசுகட்டுப்பாடு வாரியத்தில் இயக்க அனுமதி ஏதும் பெறவில்லை. சுத்திகரிக்கப்படாத சலவை கழிவுநீர், அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு பாய்ச்சப்பட்டது, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.இதேபோல், வெள்ளகோவில், திருமங்கலம், செம்மலை கவுண்டன் வலசு பகுதியில், ஸ்ரீகணபதி விவாசன் ஸ்பின்னர்ஸ்; எபிநேசர் ஸ்பின்னர்ஸ் என்கிற பெயரில், கழிவு பஞ்சில் நுால் தயாரிக்கும் ஆலைகள் (ஓ.இ., மில்) உள்ளன.

இவ்விரு ஆலைகளிலிருந்து, கழிவு பஞ்சு வெளியேறி, அருகில் செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலில் ஆங்காங்கே படிந்துள்ளது.மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் நடத்திய ஆய்வில், இவ்விரு நுாற்பாலைகளும், வாரியத்தில் இயக்க அனுமதி பெறாததும் தெரியவந்தது.மாசுகட்டுப்பாடு அதிகாரிகளின் பரிந்துரைப்படி, வாஷிங் நிறு வனம் மற்றும் இரண்டு நுாற்பாலைகளின் மின் இணைப்பை துண்டிக்க, கலெக்டர் விஜயகார்த்தி கேயன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X