திருப்பூர் : திருப்பூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நடந்த ஊழலை கண்டித்து மா.கம்யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் நெருப்பெரிச்சலில் உள்ளது. கடந்த பல மாதங்களில் நடந்த பத்திரப்பதிவில் கூடுதல் கட்டணங்களுக்கு தொகை செலுத்திய ரசீதுகளை அழித்து, கோடிக்கணக்கில் தொகை சுருட்டப்பட்டுள்ளது.இது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தி, 2 இணை பதிவாளர், 2 சார் பதிவாளர், 3 உதவியாளர் என மொத்தம், ஏழு பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு குறித்து, கமிஷனர் ஆபீசில் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், பகுதிவாரியாக அலுவலகம் திறக்க வலியுறுத்தியும், மா.கம்யூ., சார்பில், பதிவுத்துறை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் காமராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தனர். இதில், பங்கேற்றவர்கள் பத்திரப்பதிவு முறைகேடு குறித்தும், ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கோஷமிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE