சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடைக்கு எதிர்ப்பு; பெண்கள் போராட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருப்பூர் : வெங்கமேடு பகுதியில் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி, வெங்கமேடு பகுதியில் மதுக்கடை உள்ளது. அதே பகுதியில், இன்னொரு மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதனால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நவ., மாதம்

திருப்பூர் : வெங்கமேடு பகுதியில் எதிர்ப்பை மீறி மதுக்கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அவிநாசியை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி, வெங்கமேடு பகுதியில் மதுக்கடை உள்ளது. அதே பகுதியில், இன்னொரு மதுக்கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதனால், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நவ., மாதம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.ஆனால், மதுக்கடை திறக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் திரண்டு சென்று, நுழைவாயிலில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் முற்றுகையில் ஈடுபட்டோருடன் பேச்சு நடத்தி, ஐந்து பேரை கலெக்டரைச் சந்தித்து மனு அளிக்க அழைத்து சென்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஏற்கனவே உள்ள மதுக்கடையால் ஏற்படும் சரமம் போதாது என்று தற்போது புதிதாக ஒரு கடையும் வைத்துள்ளனர். கலெக்டருக்கு மனு கொடுத்தும், கடை திறக்கப்பட்டுள்ளது. அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X