ஆட்டம் காணும் நிதிஷ் பதவி

Added : டிச 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாட்னா:பீஹாரில் ஆளும் கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆட்சி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பீஹாருக்கு கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 127

பாட்னா:பீஹாரில் ஆளும் கூட்டணியில் உள்ள முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆட்சி மாற்றம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பீஹாருக்கு கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 127 இடங்களில் வென்றது. இதில் பா.ஜ. 75 இடங்களிலும் ஐக்கிய ஜனதாதளம் 43 இடங்களிலும் வென்றன.எதிர்க்கட்சிகள் அடங்கிய மகாகட்பந்தன் கூட்டணி 109 இடங்களில் வென்றது. முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 74 இடங்களிலும் காங். 19 இடங்களிலும் வென்றன.

தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி நிதிஷ்குமார் முதல்வராக பொறுப்பேற்றார்.இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சமீபத்தில் ஆளும் பா.ஜ.வில் இணைந்தனர். இதனால் பா.ஜ. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த சம்பவங்களால் பீஹாரிலும் கூட்டணி கட்சிகள் இடையே பிரச்னை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

'அருணாச்சல் சம்பவம் வேதனை அளிக்கிறது. ஆனால் அதன் தாக்கம் பீஹாரில் இருக்காது' என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய பொதுச் செயலர் கே.சி. தியாகி கூறியிருந்தார். இந் நிலையில் 'பா.ஜ. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவை முதல்வராக்க நிதிஷ்குமார் முன்வர வேண்டும்' என ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த உதய் நாராயண் சவுத்ரி கூறியிருந்தார்.

இதையடுத்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் ஷியாம் ரஜக் கூறியுள்ளதாவது: ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 பீஹார் எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சியில் சேருவதற்கு ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஆனால் அது கட்சித் தாவல் தடை சட்ட சிக்கலை ஏற்படும். அதனால் 28 எம்.எல்.ஏ.க்கள் வந்தால் பிரச்னை இருக்காது என்று கூறியுள்ளோம். விரைவில் அது நடக்கும். எங்களுடைய கூட்டணி அரசு விரைவில் பதவியேற்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
31-டிச-202022:18:58 IST Report Abuse
தல புராணம் தமிழ்நாட்டில் நடக்கப் போறதுக்கு டிரைலர்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X