திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி வசூல் பணி மீண்டும் மும்முரமாக துவங்கியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் வரி உரிமக் கட்டணங்கள் உள்ளிட்ட வரியினங்கள் விதிக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் மூலம் வசூலிக்கப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக வரி வசூலிப்பு பணி சற்று மந்தமாக இருந்தது.
தற்போது, நிதியாண்டு முடிவு நெருங்கி வரும் நிலையில், வரி வசூலிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நான்கு மண்டலங்களிலும் வரி செலுத்துவது குறித்து மைக் கட்டிய வாகனம் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.பொதுமக்கள் வசதிக்காக வரும் மார்ச் மாத இறுதி வரை அனைத்து வரி வசூல் மையங்களும், சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை இன்றி இயங்கும் என மாநகராட்சி வருவாய் பிரிவினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE