பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வு போக்குவரத்து ஊழியர்கள் வாழ்வு சான்றிதழ் அளிக்க உத்தரவு

Added : டிச 31, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள், வாரிசுதாரர்கள் வாழ்வுச் சான்றிதழ் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேதியை திண்டுக்கல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மண்டல மேலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாரிசு தாரர்கள் தங்களது வாழ்வு

திண்டுக்கல் : அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள், வாரிசுதாரர்கள் வாழ்வுச் சான்றிதழ் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய தேதியை திண்டுக்கல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மண்டல மேலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் வாரிசு தாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழ் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திண்டுக்கல் பணிமனை 1 ல் வருகின்ற ஜன., 2 முதல் ஜன 30 ம் தேதி வரையிலும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேனி பணிமனை அலுவலகத்தில் ஜன., 2 முதல் ஜன., 10 வரையிலும் சமர்ப்பிக்க வேண்டும். தேனியில் ஜன., 10 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க முடியாதவர்கள் ஜன.,30 க்குள் திண்டுக்கல்லில் வந்து கொடுக்கலாம்.

ஓய்வு பெற்ற பணியாளர்கள் சமர்ப்பிக்க வேண்டிய வாழ்வு சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் குறித்த விவரங்கள் அனைத்து கிளைகளிலும் தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக உரிய பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X