கோவை:''திருமாவளவன் தொடர்ந்து, ஹிந்து மதத்தை இழிவுபடுத்தினால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்,'' என, ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறினார்.
கோவையில் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:மதநல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ஹிந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்வதோடு, ஹிந்து மதத்தை பற்றி இழிவாக பேசிவருகிறார். பிற மத தவறுகளை தட்டிக் கேட்பதில்லை.
ஹிந்துக்களை மட்டும் இழிவாக பேசுவதில் ஒரு துளி கூட நியாயம் இல்லை. தொடர்ந்து இதேபோன்று இழிவாக பேசினால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, அ.தி.மு.க., அரசு ஆதரித்து நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால், அனைத்து திட்டங்களையும், அரசியல் லாபத்துக்காக ஸ்டாலின் எதிர்க்கிறார்.
மக்கள் அரசியல்வாதிகளை புரிந்து வைத்திருக்கின்றனர்; அது தேர்தலின்போது வெளிச்சத்துக்கு வரும்.இவ்வாறு, இப்ராஹிம் கூறினார்.முன்னதாக, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., சிறுபான்மை அணி சார்பில் நடந்த மத நல்லிணக்க நிகழ்ச்சியில் இப்ராஹிம் பங்கேற்றார். காமாட்சிபுரி ஆதினம் சாந்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பாஸ்டர் பிரின்ஸ் மற்றும் டேவிட் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE