சபரிமலை:மகரவிளக்கு கால பூஜைகளுக்காக, சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி தனிமைப்படுத்த பட்டுள்ளதால், தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்தார்.
கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து, டிச., 26 இரவு, 9:00 மணிக்கு அடைக்கப்பட்ட நடை, நேற்று மாலை, 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ்போற்றிக்கு உதவியாக இருந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார்.இதனால், தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து, பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
இரவு, 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் துவங்கும். ஜன., 14ல், மகரவிளக்கு பெருவிழா நடக்கிறது. மண்டல சீசனில், 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஜன., 19 வரை, தினமும், 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.'ஆன்லைன்' முன்பதிவு, கொரோனா, 'நெகட்டிவ் ரிசல்ட்' இல்லாமல் வரும் பக்தர்கள், நிலக்கல்லில் இருந்து, சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE