'பிரகதி' கூட்டம்: பிரதமர் தலைமையில் ஆய்வு

Added : டிச 31, 2020
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற, 34வது 'பிரகதி' ஆய்வுக் கூட்டத்தில், 10 மாநிலங்களில் நடைபெற்று வரும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, 'பிரகதி'எனப்படும் ஆய்வுக் கூட்டம்,

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நடைபெற்ற, 34வது 'பிரகதி' ஆய்வுக் கூட்டத்தில், 10 மாநிலங்களில் நடைபெற்று வரும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் குறித்து, விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

மத்திய அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, 'பிரகதி'எனப்படும் ஆய்வுக் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த வகையில், 'பிரகதி'யின், 34வது ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது.

இதில், உ.பி., ம.பி., ராஜஸ்தான், ஜம்மு -- காஷ்மீர், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, டில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் தாத்ரா -- நாகர் ஹவேலி ஆகிய, 10 மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதில், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு துறை திட்டங்கள் குறித்து, பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தின் போது, பிரதமர் காப்பீடு திட்டம், ஜல் ஜீவன் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. அப்போது, அனைத்து திட்டங்களையும் திட்டமிட்ட தேதியில் முடிக்கவும், மக்கள் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணுமாறும், சம்பந்தப்பட்ட மாநில தலைமை செயலர்களுக்கு, பிரதமர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X