தமிழ்நாடு

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவு

Added : டிச 31, 2020
Share
Advertisement
கோவை : கோவையில், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில், இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''தற்போது கோவையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள, நோய் தொற்று, புத்தாண்டு கொண்டாட்டங்களால், அதிகரிக்கும் நிலை உண்டாகலாம். சில நாடுகளில், இந்நோய் பாதிப்பு

கோவை : கோவையில், உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில், இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து, கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, கலெக்டர் ராஜாமணி கூறுகையில், ''தற்போது கோவையில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள, நோய் தொற்று, புத்தாண்டு கொண்டாட்டங்களால், அதிகரிக்கும் நிலை உண்டாகலாம். சில நாடுகளில், இந்நோய் பாதிப்பு மீண்டும் உண்டாகி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், கட்டுப்பாட்டு பணிகளை தீவிரப்படுத்தவேண்டியுள்ளது.

கோவையில், உணவகம், தங்கும் விடுதி, கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை. மீறினால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சாலைகளில் கொண்டாடவும் அனுமதியில்லை. கண்காணிப்பு பணிகளுக்கு ஒவ்வொரு வட்டத்திலும், துணை கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X