பொது செய்தி

இந்தியா

'இந்திய கப்பல் குழுவினர் விரைவில் நாடு திரும்புவர்'

Added : டிச 31, 2020
Share
Advertisement
புதுடில்லி:“சீன துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இந்திய சரக்கு கப்பல்களில் சிக்கியுள்ள, 39 இந்தியர்களும், விரைவில் நாடு திரும்புவர்,” என, மத்திய துறைமுக, கப்பல், மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார்.நம் அண்டை நாடான சீனாவுடன், எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இரண்டு இந்திய சரக்கு

புதுடில்லி:“சீன துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இந்திய சரக்கு கப்பல்களில் சிக்கியுள்ள, 39 இந்தியர்களும், விரைவில் நாடு திரும்புவர்,” என, மத்திய துறைமுக, கப்பல், மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்தார்.

நம் அண்டை நாடான சீனாவுடன், எல்லைப் பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், இரண்டு இந்திய சரக்கு கப்பல்கள், குழுவினருடன், சீன துறைமுகத்தில், பல மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.இருதரப்பு உறவு மோசமாக இருப்பதன் காரணமாகவே, அந்த கப்பல்களை, சீன அதிகாரிகள் நிறுத்திவைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

எனினும், சீன அரசு, அதை மறுத்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சில வழிமுறைகளை கடைப்பிடித்து வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே, அந்த சரக்கு கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய துறைமுக, கப்பல், மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியதாவது:சீன துறைமுகத்தில், கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள விவகாரம் குறித்து, சீன அதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில், கப்பலிலிருக்கும் ஊழியர்கள், 39 பேரும், பாதுகாப்பாக நாடு திரும்புவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X