சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டபுள்' விலை கொள்கை கைவிட வினியோகஸ்தர்கள் போராட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
கோவை : தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், கோவை, தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே, நேற்று காலை கருப்பு சட்டை போராட்டம் நடத்தப்பட்டது.போராட்டத்தில் பங்கேற்ற நுகர்பொருள் வினியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர்.தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு

கோவை : தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில், கோவை, தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே, நேற்று காலை கருப்பு சட்டை போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற நுகர்பொருள் வினியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்களின் இரட்டை விலை கொள்கையை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர்.தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் மோகன் சங்கர் கூறியதாவது: தயாரிப்பு நிறுவனங்கள் பாரம்பரியமாக விநியோகஸ்தர்கள் மூலம் நடக்கும், சில்லரை வணிகத்துக்கு ஒரு விலை மற்றும் பகட்டான 'ஆன்லைன்' வினியோகஸ்தர்களுக்கு ஒரு விலை என வைத்துள்ளனர்.இந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுக்கும் விலை, எங்களுக்கு கொடுக்கும் விலையை காட்டிலும் மிகவும் குறைவு.

இதன் காரணமாக, நாங்கள் ஆன்லைன் வினியோகஸ்தர்களுடன் போட்டி போட முடியாத நிலையில் உள்ளோம்.தயாரிப்பு நிறுவனங்கள், இந்த இரட்டை விலை கொள்கையை கைவிட வேண்டும். இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும், இரட்டை விலை கொள்கை தொடர்கிறது. எங்களுக்கு, 100 ரூபாய்க்கு கொடுத்தால், அவர்களுக்கு 75-80 ரூபாய் என்று கொடுக்கின்றனர்.

இதனால் மார்க்கெட்டில் போட்டி போட முடியாமல், வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை விலை கொள்கையை, கைவிட வேண்டும். இல்லையென்றால், அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X