பழங்குடியினருக்கு உதவி
பேரூர்: ஜாகிர் போராத்தி பழங்குடியினர் கிராமத்தில், அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில், 'சக்தி' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், ஐந்து மூட்டை அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, ரவை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
தேனீபெட்டிகள் வழங்கல்
பேரூர்: கல்கொத்தி பதி பழங்குடியின மக்களின், வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், சிறுவாணி விழுதுகள் அமைப்பு மற்றும் அண்ணா பல்கலை சார்பில், தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவடைந்து, 40 பயனாளிகளுக்கு, 50 தேனீ பெட்டிகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பைக் திருடும்போது சிக்கியவர் கைது
கோவை: கோவையில் பைக் திருடிய போது, கையும் களவுமாக சிக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், கமலா மில் குட்டை வீதியை சேர்ந்த மணி,25. நேற்று பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள பேக்கரி முன், பைக்கை நிறுத்திவிட்டு டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர், அவரது பைக்கை திருடி செல்ல முயன்றார்.இதைப்பார்த்த முகில், கூச்சலிட்டபடி, அந்த நபரை மடக்கி பிடித்தார். அங்கு கூடியபொதுமக்கள், அந்த நபரை 'கவனித்து' போலீசில் ஒப்படைத்தனர்.சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கையில், அந்நபர் நீலிகோணம்பாளையத்தை சேர்ந்த சவுந்திரராஜன், 22, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து சிறையிலடைத்தனர்
.காஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கோவை: காஸ் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோவை மேற்கு மண்டல, இந்திய கம்யூ., சார்பில் பி.என்.புதுார் பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டல செயலாளர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம்கோரிக்கை குறித்து பேசினார்.சமையல் காஸ் விலை 15 நாளில், 100 ரூபாய் உயர்த்தப்பட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல், டீசல் விலையைகட்டுப்படுத்த வேண்டும், மூலப்பொருட்கள் விலை உயர்வால் அழிந்து வரும் சிறு மற்றும் குறுந்தொழில்களை பாதுகாக்க வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆர்ப்பாட்டம் நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE