கோவை : பல மாதங்களுக்கு பின்பு, புதிய உறுப்பினர்களுடன் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடந்தது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிரிவினரின் நலன், பாதுகாப்புக்காக பத்துக்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த பல மாதங்களாக கூட்டங்கள் ஏதும் நடத்தப்படவில்லை.இக்குழுவின் செயல்பாடுகள், புகார்கள், போன்றவற்றை கண்காணிக்க, மாவட்ட கண்காணிப்பு குழு கடந்த, டிச., இரண்டாம் வாரம் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து, புதிய உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, பஞ்சமி நிலம் அபகரிப்பு, நில மோசடி, பண மோசடி உள்ளிட்ட, 13 வழக்குகள் குறித்து அனைத்து தரப்பு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.இனிவரும் காலங்களில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இக்கூட்டம் நடத்தப்படும் என்றும், அடுத்த கூட்டம், மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும், கலெக்டர் அறிவித்துள்ளார்.இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை இயக்குனர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., சுரேஷ், பேராசிரியர்கள் அன்புசிவா, சிங்காரவேலு, சுரேஷ்பாபுஉட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE