சென்னை:சிறுபான்மை கல்வி உதவி தொகைக்கு, ஒரே வங்கி கணக்கில், பல விண்ணப்பங்கள் பதிவு செய்துள்ளதை, ஆய்வு செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஒரு சில மாநிலங்களில், சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெற, மாணவர்களின் சார்பில், அவர்களின் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்கள், தனியார் இணையதள சேவை மையங்களில், தங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து, விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளனர்.
இதை, தனியார் மைய நிர்வாகிகளில், சிலர் தவறாக பயன்படுத்தி, அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' வழியே இணைத்துள்ளனர்.அவர்கள், ஒரே வங்கி கணக்கு எண்ணில், பல மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்களுக்கு, இது குறித்து தகவல் அளித்து, விண்ணப்பித்த மாணவர்களின் விபரங்களை மறு ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE