சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீர் வழித்தடத்தில் கட்டட ஆக்கிரமிப்பு; நோட்டீஸ் வழங்கியது மாநகராட்சி

Added : டிச 31, 2020
Share
Advertisement
கோவை : கோவை, லங்கா கார்னர் அருகே, பர்மா ெஷல் லேன் பகுதியில், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள, 25 கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.கோவை, பெரிய கடை வீதியில் திருச்சி ரோட்டுக்கும், ஸ்டேட் பாங்க் ரோட்டுக்கும் திரும்பக் கூடிய இடத்தில், லங்கா கார்னர் ரயில்வே கீழ்பாலம் அமைந்திருக்கிறது.மழைக்காலத்தில், இப்பகுதியில் முழங்கால் அளவுக்கு

கோவை : கோவை, லங்கா கார்னர் அருகே, பர்மா ெஷல் லேன் பகுதியில், நீர் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள, 25 கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கோவை, பெரிய கடை வீதியில் திருச்சி ரோட்டுக்கும், ஸ்டேட் பாங்க் ரோட்டுக்கும் திரும்பக் கூடிய இடத்தில், லங்கா கார்னர் ரயில்வே கீழ்பாலம் அமைந்திருக்கிறது.மழைக்காலத்தில், இப்பகுதியில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கும்; வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கும். மின் மோட்டார் இயக்கி, பம்ப் செய்து, தண்ணீர் வெளியேற்றப்படும்.ஒப்பணக்கார வீதி, சிரியன் சர்ச் ரோடு, கூட்ஸ்ெஷட் ரோட்டில் வழிந்தோடி வரும் மழை நீர், லங்கா கார்னர் அருகில் உள்ள வாய்க்கால் வழியாக, வாலாங்குளத்தில் சேர வேண்டும்.

இவ்வாய்க்கால், 30 அடி அகலம் கொண்டது. வாய்க்காலை ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டப்பட்டுள்ளதால், 10 அடியாக சுருங்கியிருக்கிறது.இதன் காரணமாகவே தண்ணீர் செல்ல வழியின்றி, பாலத்துக்கு கீழ் தேங்கி, போக்குவரத்து சிரமத்தை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், வாய்க்கால் ஆக்கிரமிப்பை கண்டறிந்து, அளவீடு செய்துள்ளனர்.அங்குள்ள, 25 ஆக்கிரமிப்பு கட்டட உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் வழங்கியுள்ளனர். விரைவில் ஆக்கிரமிப்பு கட்டடம் இடித்து அகற்றப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X