கோவை : புத்தாண்டு நாட்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு, கோவை அரசு மருத்துவமனையில், சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனினும், இளைஞர்கள் பலரும், புத்தாண்டை கொண்டாட தயாராகி வருகின்றனர்.இன்று நள்ளிரவு, பார்க், முக்கிய ரோடுகள் மற்றும் மைதானங்களில் இளைஞர்கள் பலரும் கூட்டமாக கூடி கேக் வெட்டி கொண்டாடுவர். முக்கிய சாலைகளில் கூட்டமாக பைக்குகளில் வலம் வருவர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் பலரும் விபத்துகளில் சிக்கி காயம் ஏற்படுவதுண்டு.இதை கருத்தில் கொண்டு, கோவை அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதிகளுடன், சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காயம் ஏற்பட்டவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க, 'ஜீரோ டிலே' வார்டும் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கென, சிறப்பு மருத்துவர் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்ரே, சி.டி.,ஸ்கேன் ஆகிய வசதிகளையும், தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என, மருத்துவமனை டீன் காளிதாஸ் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE