தேவதானப்பட்டி:இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று வன ரேஞ்சர்களாக தேர்வான 10 பெண்கள் உட்பட 34 பேருக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி வன வளாகத்தில் பயிற்சி துவங்கப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறை கூடுதல்இயக்குனர் திருநாவுக்கரசு தலைமையில் வனபாதுகாவலர் பாரதி,கொடைக்கானல் மாவட்ட வனஅலுவலர் தேஜஸ்வி, உதவி வனபாதுகாவலர் பயிற்சி அலுவலர் ஸ்ரீவில்சன், தேவதானப்பட்டி வன அதிகாரி டேவிட் ராஜன் ஆகியோர் ஜன. 10 வரை பயிற்சி அளிக்க உள்ளனர்.
வனஉயிரினம் பாதுகாப்பு, மலையேற்ற பயிற்சி, தீ தடுப்பு பயிற்சி, வனவிலங்குகள் மோதலை தடுத்தல், வனவிலங்குகளிடமிருந்து மனிதர்களை காப்பாற்றுவது,நக்சல் தடுப்பு, தீ தடுப்பு, கஞ்சா பயிரிடுவதை அழித்தல் உட்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. முருகமலை, ஈச்சமலை அடுக்கம், காப்புக்காடு ஆகிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE