அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவிலில் தி.மு.க., கூட்டம் தடை கோரி பா.ஜ., புகார்

Added : டிச 31, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:கோவில் மைதானத்தில், பக்தர்களுக்கு இடையூறாக, தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது:.'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்துடன், தி.மு.க., சார்பில், ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கிராம சபை கூட்டம், தடையை மீறி நடத்தப்படுகிறது. ஜன., 2ல், தொண்டாமுத்துார் அருகே பரமேஸ்வரன்பாளையம்,

கோவை:கோவில் மைதானத்தில், பக்தர்களுக்கு இடையூறாக, தி.மு.க., சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

பா.ஜ., சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது:.'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தீர்மானத்துடன், தி.மு.க., சார்பில், ஒவ்வொரு ஊரிலும் மக்கள் கிராம சபை கூட்டம், தடையை மீறி நடத்தப்படுகிறது. ஜன., 2ல், தொண்டாமுத்துார் அருகே பரமேஸ்வரன்பாளையம், கொங்கு திருப்பதி கோவில் மைதானத்தில், நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது;

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.பா.ஜ., தொண்டாமுத்துார் ஒன்றிய தலைவர் பிரபு, போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகாரில், 'வரும், 2ம் தேதி, மார்கழி சனிக்கிழமை என்பதால், பக்தர்கள் அதிகளவில் கோவிலுக்கு வருவர். அவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க, தி.மு.க., கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-டிச-202009:02:38 IST Report Abuse
Bhaskaran அனுமதி அளித்த நிர்வாகிகளை கேளுங்கள் .காசுக்கு விலைபோகும் ஈனர் கூட்டம் என்ன வேண்டுமானாலும் செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X