தேனி : வீட்டின் பத்திரங்களை காணவில்லை என பொய் புகார் கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்த வேடசந்துார் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் லதா 45, மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி அல்லிநகரம் கோட்டைக்களம் தெருவில் வசிக்கும் லதா, 2019 மே 22ல் அங்கு 1வது தெருவில் உள்ள தனது வீட்டின் பத்திரங்களை பழனிச்செட்டிபட்டி சஞ்சய் காந்தி 3வது தெரு மணிகண்டன் 51, என்பவருக்கு பவர் பத்திரம் பதிவு செய்து கொடுத்து ரூ.25 லட்சம் பெற்றார். பின்னர்வீட்டின் ஒரிஜினல் பத்திரங்கள் காணவில்லை என அல்லிநகரம் போலீசில் புகார் அளித்து போலீசாரை ஏமாற்றினார். பிப்., 20ல் மதுரை உசிலம்பட்டி ஆரியப்பட்டியை சேர்ந்த பவுன்சாமி என்பவருக்கு தேனி சார்பதிவாளர் அலுவலகத்தில் அதை கிரையம் செய்து கொடுத்து மோசடி செய்தார். லதா மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE