அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீது அமைச்சர் வேலுமணி குற்றச்சாட்டு

Added : டிச 31, 2020
Share
Advertisement
கோவை:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய்யான வாக்குறுதி அளிப்பதில் டாக்டர் பட்டம் பெற்றவர்,'' என, அமைச்சர் வேலுமணி பேசினார்.கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினபுரியில், 'அம்மா மினி கிளினிக்'கை, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.இவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், முதல்வர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். களத்தில் நின்று மக்களுக்கு பணி செய்பவர். மற்றவர்களை

கோவை:''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொய்யான வாக்குறுதி அளிப்பதில் டாக்டர் பட்டம் பெற்றவர்,'' என, அமைச்சர் வேலுமணி பேசினார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ரத்தினபுரியில், 'அம்மா மினி கிளினிக்'கை, அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.இவர், நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், முதல்வர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். களத்தில் நின்று மக்களுக்கு பணி செய்பவர். மற்றவர்களை போல, அறையில் இருந்து கொண்டு, அறிக்கைகளை மட்டும் விடுபவர் அல்ல. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், ஆதாரமின்றி அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆதாரத்துடன் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்க தயார்.இல்லாவிட்டால், அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும். தொண்டாமுத்துாரில், 2ம் தேதி கிராமசபை கூட்டம் என்ற பெயரில், ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டம் நடக்கிறது.

3ம் தேதி அதே இடத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் நடிகை வித்யா கலந்து கொள்ளும் அ.தி.மு.க., பிரசார கூட்டம் நடக்கிறது.பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில், ஸ்டாலின் டாக்டர் பட்டம் பெற்றவர். முதல்வர் பழனிசாமி தான், முதல்வர் வேட்பாளர்.

இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கூட்டணிக் கட்சியினரும் ஆமோதித்துள்ளனர்; இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.மாநகராட்சி கமிஷனர் குமாரவேல்பாண்டியன், துணை கமிஷனர் மதுராந்தகி, எம்.எல்.ஏ.,க்கள் அருண்குமார், அர்ஜுனன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X