ஐஸ்கட்டி ஏரியில் மீன்
சீனாவின், சாங்கன் ஏரியில் குளிர்கால மீன் பிடி சீசன் தொடங்கியுள்ளது. வழக்கமாக, டிச., இறுதி வாரத்தில் தொடங்கும் இந்த சீசனில், ஐஸ் கட்டியாக உறைந்துள்ள ஏரியில் இருந்து, மீனவர்கள் மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம். இப்போது, சாங்கன் ஏரி தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டிகளாக மாறியுள்ளது. மீனவர்கள், பாரம்பரிய முறைப்படி குதிரைகளை பயன்படுத்தி, ஐஸ் கட்டிகளை உடைத்து, மீன்களை பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
துப்பாக்கியான பூனை
இளைஞர் ஒருவர் தன் செல்லப்பிராணியான பூனையை, துப்பாக்கியை போன்று துாக்கிப் பிடித்து வைத்திருக்கிறார். அப்படியே பிடித்துக் கொண்டு வீட்டின் ஒவ்வொரு இடத்துக்கும் சென்று, துப்பாக்கியால் சுடுவதை போல் பாவனை செய்கிறார். பூனையும், 'மியாவ்' என கத்திக் கொண்டே பயணிக்கிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ, பலரையும் ரசிக்க செய்துள்ளது.
குஷியான கரடி
சிறுவன் ஒருவன், தன் குடும்பத்தாருடன் விலங்கியல் பூங்காவுக்கு சுற்றிப் பார்க்க செல்கிறான். அங்கு, கண்ணாடி கூண்டில், ஒரு கரடி அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற சிறுவன், சுவருக்கு பின்னால் மறைந்துக்கொண்டு கரடியுடன் விளையாடுகிறான். இதைப் பார்த்து குஷியான கரடி, மறைந்திருக்கும் சிறுவனை கண்டுபிடித்து விளையாடுகிறது. மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சி, வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது.
நாயை காப்பாற்றிய போலீஸ்
அமெரிக்காவில், மிக்சிகன் ஏரி பகுதியில், ஒரு நாய் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்த ஜூவான் பர்ரிஸ் என்ற போலீஸ்காரர் கரையில் படுத்துக்கொண்டு, மிகவும் சிரமப்பட்டு, அந்த நாயை தண்ணீரில்இருந்து வெளியேற்றி காப்பாற்றுகிறார். வாயில்லா ஜீவனை காப்பாற்றிய போலீசின் வீடியோ, வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும், 'ரியல் ஹீரோ' என, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE