பொது செய்தி

தமிழ்நாடு

காற்றின் வேக மாறுபாடால் மிதமான மழைக்கு வாய்ப்பு

Added : டிச 31, 2020
Share
Advertisement
சென்னை:காற்றின் திசை வேக மாறுபாட்டால், வரும், 3ம் தேதி வரை சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காற்றின் திசை வேக மாறுபாட்டால், தமிழகத்தில், இன்று ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யும். நாளை தெற்கு கடலோர மாவட்டங்கள், நாகை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், லேசான

சென்னை:காற்றின் திசை வேக மாறுபாட்டால், வரும், 3ம் தேதி வரை சில இடங்களில், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காற்றின் திசை வேக மாறுபாட்டால், தமிழகத்தில், இன்று ஓரிரு இடங்களில், லேசான மழை பெய்யும். நாளை தெற்கு கடலோர மாவட்டங்கள், நாகை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்யும்.

மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும், 2ம் தேதி மிதமான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.வரும், 3ம் தேதி தெற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிதமான மழை பெய்யும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால், வரும், 2ம் தேதி வரை, மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X