சென்னை:''அ.தி.மு.க.,வை உடைக்கவோ, இரட்டை இலையை முடக்கவோ, எந்த சக்தியாலும் முடியாது,'' என, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:நடிகர் ரஜினி, நீண்ட ஆயுளுடன், தமிழக மக்களுக்கும், கலைத் துறைக்கும் சேவையாற்ற வேண்டும். அ.தி.மு.க.,விற்கான ஓட்டுகள், எந்த நிலையிலும் பிரியாது. இரட்டை இலைக்கு ஓட்டு போட்ட கைகள், அதற்கு தான் போடும்.ஏழு முறை சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் எப்போதும், எங்களுக்கு சாதகமாக உள்ளனர்.
தி.மு.க.,விற்கு இந்த தேர்தலில், முழு பாதிப்பு இருக்கும். உடைவதற்கு, அ.தி.மு.க., ஒன்றும் மண் சட்டி அல்ல; எக்கு கோட்டை.எத்தனையோ பேர் சதி செய்தும், இரட்டை இலை இன்றும் காட்சி தருகிறது. இரட்டை இலையை முடக்கவோ, கட்சியை உடைக்கவோ, எந்த சக்தியாலும் முடியாது.தி.மு.க.,வில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களுக்கு, மூத்த நிர்வாகிகளுக்கு, மரியாதை இல்லை. தாத்தா, மகன், பேரன் என, ஒரே குடும்பத்தினர் தான் தலைவராக வர முடியும். சசிகலா குறித்த நிலைப்பாட்டில், மாற மாட்டோம். ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து, கட்சி தான் முடிவு செய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE