பாலக்காடு:''கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில், பல இடங்களில், ஆளும் மா.கம்யூ., கூட்டணியுடன், காங்கிரஸ் கைகோர்த்து செயல்பட்டுள்ளது,'' என, மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டினார்.
பாலக்காட்டில் சுரேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் அரசுக்கு எதிராக போராடி ஆட்சியை பிடிப்போம் என கூறி வந்த காங்., தற்போது, அந்த கட்சியுடன் பல இடங்களில் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் இரு கட்சியினரும் கூட்டணி அமைத்து பா.ஜ.,வை எதிர்த்தனர். இரு தரப்பினருக்கும், அரசியல் ஒழுக்கம் என்பது சிறிதும் இல்லை.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ரமேஷ் சென்னித்தலாவின் சொந்த ஊராட்சியான சென்னித்தலாவில் கூட, தலைவர் பதவியை கம்யூ., கைப்பற்றியுள்ளது. தங்களை விட குறைவான கவுன்சிலர்கள் இருந்தும், காங்., ஆதரவு அளித்துள்ளது. சட்டசபை தேர்தலில், ஹரிப்பாடு தொகுதியை தக்க வைக்கும் நோக்கத்தில் தான், ரமேஷ் சென்னித்தலா, மா.கம்யூ., கட்சிக்கு அடிமை வேலை செய்கிறார்.இரு கட்சியினரும் கூட்டணி அமைத்துள்ள உள்ளாட்சி நிர்வாகங்களை எதிர்த்து, பா.ஜ., போராட்டம் நடத்தும். ஜன., 11ல் திருச்சூரில் நடக்கும் மாநில குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE