பொது செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனவிழா நடராஜரின் ஆனந்த தாண்டவத்துடன் நடந்தது. பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச்சன்னதியாக அருள்பாலிக்கும்மூலவர் சிவகாம சுந்தரிசமேத நடராஜருக்கு டிச.,21ல்மாணிக்கவாசகர் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.* பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்ஆருத்ரா தரிசனத்தையொட்டி, உற்ஸவம் அபிேஷகம்

பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனவிழா நடராஜரின் ஆனந்த தாண்டவத்துடன் நடந்தது.

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் தனிச்சன்னதியாக அருள்பாலிக்கும்மூலவர் சிவகாம சுந்தரிசமேத நடராஜருக்கு டிச.,21ல்மாணிக்கவாசகர் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.* பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்ஆருத்ரா தரிசனத்தையொட்டி, உற்ஸவம் அபிேஷகம் நிறைவடைந்து வீதிவலம் வந்தார்.* எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் உற்ஸவருக்கு சிறப்புஅபிேஷக, ஆராதனை நடந்தன.* நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி கோயிலில் அதிகாலை 2:30 முதல் 3:30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் கோயிலில் மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து நடராஜர் சன்னதி முன் எழுந்தருளினார்.பின் கோயில் குருக்கள்திருவாசகம் பாடியதும் சுவாமி நடராஜர் சன்னதிமுன் மூடி இருந்த 7 திரைகள் காலை 5:30 மணிக்கு விலகியதும், தங்க கவசம் அணிந்திருந்த சுவாமி நடராஜர் ஆருத்ரா தரிசனத்தில் மாணிக்கவாசகருக்கு காட்சியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X