பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு முன்பே வேலைவாய்ப்பு மையம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடியில் எனது தந்தையார் பெயரில் தெளிசாத்தநல்லுாரில் ஸ்கில் டெவலப்மன்ட் சென்டர் தேர்தலுக்கு முன்பாகவே செயல்பட வைப்பேன் என, பரமக்குடியில் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல்பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள ஓய்ந்து போய் உள்ள கைத்தறிகளை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும். தொழிலை மீட்டெடுக்க

பரமக்குடி : பரமக்குடியில் எனது தந்தையார் பெயரில் தெளிசாத்தநல்லுாரில் ஸ்கில் டெவலப்மன்ட் சென்டர் தேர்தலுக்கு முன்பாகவே செயல்பட வைப்பேன் என, பரமக்குடியில் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல்பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: இங்குள்ள ஓய்ந்து போய் உள்ள கைத்தறிகளை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும். தொழிலை மீட்டெடுக்க வேண்டும். நான் பிறந்தபோது பரமக்குடியில் தரமான மருத்துவமனை இல்லாததால் ராமநாதபுரத்தில் பிறந்தேன். அதே நிலை 66 ஆண்டுக்குப் பிறகும் தொடர்கிறது. என் தந்தை பரமக்குடிக்கான அரசியலை செய்து விட்டு தேர்தல் அரசியலில்இருந்து ஐம்பதுகளிலேயே வெளியேறினார். அப்போது என்னிடம், உன்னுடைய அரசியல் பயணம் தொடங்க வேண்டும் என்பார். என் சகோதரர்களுக்கு இதில் விருப்பமில்லை.

எப்படி இருந்த ஊர் எப்படி ஆகிவிட்டது. இந்த தண்ணீரை குடித்து வாழும் மக்களை பார்த்து கஷ்டமாக உள்ளது. காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை இரண்டு கட்சிகளும் மாறி மாறி கூறி வருவது தான்.ஒவ்வொரு இளைஞரும் தன்னுடைய ஸ்கில் டெவலப்மன்டை கவனிக்க வேண்டும். அதற்கான மையம் பரமக்குடியில் அமைய உள்ளது. அது வெகு விரைவில் இயங்கும் மையமாக மாறும். தேர்தலுக்கு முன்பே அது திறக்கப்படும்.ஏழ்மையை பயன்படுத்தி ஓட்டை விலைக்கு வாங்குகிறார்கள்.

கல்விக்காக ரூ.பல லட்சம் கோடிகளை செலவு செய்கிறோம் என்கிறார்கள்.தோராயமாக ஒரு மாணவனுக்கு ஆண்டுக்கு45 ஆயிரம் ரூபாய் செலவாக கணக்கு கூறுகிறார்கள். அப்படியே உள்ளது அரசு பள்ளிகள்.நேர்மை இருந்தால் மட்டும் நல்ல ஆட்சி கொடுக்க முடியும், என்றார்.தொடர்ந்து எமனேஸ்வரம் நேருஜி மைதானம், கிருஷ்ணா தியேட்டர் அருகில், பொன்னையாபுரம், காந்தி சிலை, மணிநகர் மற்றும் பார்த்திபனுார் பகுதிகளில் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X