உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
ஆர்.பாரத்வாஜன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமல், காஞ்சிபுரம் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு, கோவில் அர்ச்சகர்கள் மாலையை கொடுத்து, பூரண கும்ப மரியாதையோடு வரவேற்பு கொடுத்தனர். இதை பார்க்க வேதனையாகவும், வெறுப்பாகவும் இருந்தது. இந்த வரவேற்பை, ஏற்க கமலும் தவிக்கிறார். அதை ஏற்றுக் கொள்வதற்கு, அவருக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஆம்... அவர் தான், பிராமண குலத்தில் பிறந்த, 'அக்மார்க் நாத்திகர்' ஆயிற்றே. அவர் மீது தவறு இல்லை. குற்றம் எல்லாம், பூரண கும்ப மரியாதை கொடுத்த அர்ச்சகர்கள் மீது தான். எத்தனையோ ஏழை மக்கள், கோவிலுக்கு வருகின்றனர். அவர்களை அன்புடன் வரவேற்று,
குறைகளை கேட்டு பரிகாரம் சொல்லுங்கள்.
அதை விடுத்து நடிகர், அரசியல்வாதிகளுக்கு பூரண கும்ப வரவேற்பு கொடுக்க அலையாதீர்.
கடவுள் முன் அனைவரும் சமம். அர்ச்சகர்களே... பணம் முக்கியம் அல்ல; கடவுளின் அனுகிரகமும், தன்மானமும் தான் முக்கியம். கடவுள் நம்பிக்கை இல்லாதவருக்கு, யார் சொன்னாலும் பூரண கும்ப மரியாதை கொடுக்காதீர்கள்; அந்நிகழ்வை, தவிர்த்து விடுங்கள். வேண்டா
வெறுப்பாக கோவில் பிரசாதத்தை வாங்கி, கீழே கொட்டுவது உங்களுக்கு அவமானமாக
இல்லையா? இந்த அரசியல்வாதிகள், 'பூனைக்கு தோழன்; பாலுக்கும் காவல்' போன்றோர். வெளிப்படையாக சுவாமியை வழிபடக் கூடாது; ஆனால் ஆண்டவன் அருள் வேண்டும். ஹிந்து மதத்தை கிண்டல், கேலி செய்ய வேண்டும்; ஆனால் ஹிந்துக்கள் ஓட்டு வேண்டும்.

மற்ற மதத்தினரின் சடங்குகளில், ஒரே இடத்தில், மூன்று மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் அரசியல்வாதிகள், ஹிந்துக்களை அவமானப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் மோடி, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., போன்றோர் நடந்து கொள்ளும் முறையை பாருங்கள். அவர்களை தான், பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்க வேண்டும். நீங்கள் முதலில் திருந்துங்கள்; போலி நாத்திகவாதிகள் தாமாக மாறுவர்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE