சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டேஷனில் திருடிய பெண் போலீஸ்; இன்றைய ' கிரைம் ரவுண்ட்அப் '

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
இந்தியாவில் குற்றங்கள் 1. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த யாசீன்கான் உட்ட மூன்று பயங்கரவாதிகள் சமீபத்தில் கைதாகினர். அவர்களது தகவலின்படி, பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை, பாதுகாப்பு


இந்தியாவில் குற்றங்கள்1. கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்


ஜம்மு: ஜம்மு - காஷ்மீரில், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்த யாசீன்கான் உட்ட மூன்று பயங்கரவாதிகள் சமீபத்தில் கைதாகினர். அவர்களது தகவலின்படி, பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை, பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.latest tamil news
2. பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், ஸ்ரீநகரின் பரம்போரா பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை, நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து, வீரர்கள், 'என்கவுன்டர்' தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் குறித்த விசாரணை தொடர்கிறது.


latest tamil news
3. கழுதை மீது ஊர்வலம்


புடான்: உத்தர பிரதேசத்தின் புடான் மாவட்ட கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து ஒரு பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்ட, 40 வயது நபரை, பெண்ணின் உறவினர்கள் சுற்றி வளைத்தனர். அவரது முகத்தில் கரி பூசி, கழுதை மீது ஏற்றி கிராமத்தை சுற்றி வந்துள்ளனர். இந்த, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானது. வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தமிழக நிகழ்வுகள் :-
1. ரூ.25 லட்சம் மோசடி ஊழியர் மீது வழக்கு


தேனி : வீட்டின் பத்திரங்களை காணவில்லை என பொய் புகார் கொடுத்து ரூ.25 லட்சம் மோசடி செய்த வேடசந்துார் வணிகவரித்துறை அலுவலக உதவியாளர் லதா 45, மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


2. கோவை நகை வியாபாரியிடம் ரூ.95.43 லட்சம் மோசடி


கிருஷ்ணகிரி: கோவையை சேர்ந்தவர், தங்க நகை வியாபாரி அஸ்வின்குமாரிடம் தங்கத்தை குறைவான விலைக்கு தருவதாக, ரூ. 95.43 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜசேகர் செட்டியார், நாகர்கோவிலை சேர்ந்த சி.எஸ்.ஐ., சர்ச் பாஸ்டர் மார்டின், கார் ஓட்டுனர் ராஜசேகர் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.


latest tamil news

3. இந்தாண்டு போக்சோ வழக்குகள் அதிகம்


மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டைவிட இந்தாண்டு போக்சோ சட்டத்தின்கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


latest tamil news


4. திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் போலீஸ் ரேஷ்மா தனது கணவர் மூலம் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களை திருட உதவி செய்துள்ளார். இதனை கண்டுபிடித்து ரேஷ்மா மற்றும் அன்புமணியை கைது செய்தனர்.


5. வங்கியில் ரூ.116 கோடி மோசடி


திருப்பூர்:வங்கியில் போலி ஆவணம் கொடுத்து, 116.79 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக, திருப்பூரை சேர்ந்த, ஐந்து பேர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


6. 'ஆன்லைன்' லாட்டரி மூன்று பேர் கைது


பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், 'ஆன்லைன்' லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, மூன்று பேரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.

7. மதுரை மாவட்டம் மேலூர் அருகே 102 கிலோ கஞ்சா வைத்திருந்த மாயா ஈஸ்வரன் இருவர் கைது. இருவரும் தேனி மாவட்டம் ராஜதானியை சேர்ந்தவர்கள்.

கொலை வழக்கில் நால்வருக்கு 'குண்டாஸ்'

8. திண்டுக்கல்லில் கொலை வழக்குகளில் சிக்கிய நான்கு பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது


ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே பெங்கால் மட்டம் பகுதியை சேர்ந்த நவீன் (எ) முருகேசன்(23) எடக்காடு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மஞ்சூர் எஸ்.ஐ, வினோத் தலைமையில், போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, நவீன் கஞ்சா விற்றிருந்ததை கையும் களவுமாக பிடித்தனர். 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
31-டிச-202015:28:49 IST Report Abuse
Dr. Suriya குறைஞ்ச வேலைக்கு தங்கத்தை கொடுத்திருப்பார்கள் ....ஆனா என்ன செய்றது சொப்பன சுந்தரி மாட்டிக்கிட்டாங்களே....
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
31-டிச-202014:50:49 IST Report Abuse
ANTONYRAJ இதென்னப்பா வம்பா இருக்கு புடிச்சு போட்ட வண்டிகளெல்லாம் வெயிலுக்கு காஞ்சும் மழைக்கு நனைஞ்சும் துருபுடுச்சு வீனா போறதுக்கு அத விக்கிறதுல என்ன தப்பு? இப்படியெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் அரசு ஊழியரை இப்படி....
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
31-டிச-202008:27:11 IST Report Abuse
Darmavan போலீசை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X