பொது செய்தி

இந்தியா

கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பாரதி விழா

Added : டிச 31, 2020
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாரதி விழா நடந்தது.தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவிற்கு மன்ற பொருளாளர் செல்வம் வரவேற்றார். முன்னதாக ஆதிராமன், எலிசபெத்ராணி, அமுதன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.'உழவுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பிலான மாணவர் முழக்கத்தை, முனைவர் விவேகானந்தன் துவக்கி வைத்தார். முனைவர் பட்ட ஆய்வாளர் சுபாஷினி, முனைவர்

புதுச்சேரி; புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில், பாரதி விழா நடந்தது.தமிழ்ச்சங்கத்தில் நடந்த விழாவிற்கு மன்ற பொருளாளர் செல்வம் வரவேற்றார். முன்னதாக ஆதிராமன், எலிசபெத்ராணி, அமுதன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடந்தது.'உழவுக்கு வந்தனை செய்வோம்' என்ற தலைப்பிலான மாணவர் முழக்கத்தை, முனைவர் விவேகானந்தன் துவக்கி வைத்தார். முனைவர் பட்ட ஆய்வாளர் சுபாஷினி, முனைவர் மணிகண்டன், மாணவர்கள் பரசுராமன், சுபஸ்ரீ, கார்த்திக் பேசினர். ராதாகிருஷ்ணன், தேவ கருணாகரன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர்.தொடர்ந்து மகளிர் கவியரங்கு நடந்தது. லட்சுமி தத்தை, அமலோற்பவமேரி, கலைமகள் காயத்ரி, நிவேதா, அருளாட்சி, லட்சிய மதியழகி, கலைமதி கவிதை வாசித்தனர்.இலக்கிய பெருமன்ற தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் பாலகங்காதரன் நோக்கவுரையாற்றினார். 'கொடுமையை எதிர்த்து நில்' என்ற தலைப்பில், சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழித்துறை தலைவர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். ஓவியர் முனுசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X