கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பண்டிகை சிறப்பு நிதி மற்றும் பரிசுப்பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 770 கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2,500 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை அடங்கிய பரிசு தொகுப்பை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், கள்ளக்குறிச்சி நகரப்பகுதி ரேஷன் கடைகளுக்கு, கார்டுதாரர்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் பொங்கல் பரிசு வாங்க, எந்த தேதி, நேரத்திற்கு, கடைக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில், ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.அதன்படி கள்ளக்குறிச்சி நகரப்பகுதி எம்.ஆர்.என்., நகரில் ரேஷன் கடை பணியாளர்கள் வீடு விடாக சென்று டோக்கன் வழங்கும் பணியை துவக்கி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE