விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி ஒன்றிய பா.ம.க., சார்பில் வன்னியர்களுக்கு தனி் இடஒதுக்கீடு வழங்க கோரி மக்கள் திறள் அறப்போராட்டம்நடந்தது.விழுப்புரம் மத்திய மாவட்டம் , விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில நடந்த ஆர்பாட்டத்திற்கு தொகுதிசெயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார் . விக்கிரவாண்டி நகர தலைவர் சங்கர் , ஒன்றிய செயலாளர்கள் சம்பத், சக்திவேல், ஏழுமலை, ரவி, சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, பா.ம.க., மாநில துணைத்தலைவர் அரிகரன் ஆகியோர் கலந்து கொண்டுவன்னியர்களுக்கு தனிஇட ஒதுக்கீடு கோரி ,மக்கள் திறள் அறப்போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.பின்னர் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார், லட்சுமிநாராயணன், கலைச்செல்வி சேகர் ,ராஜா, தனசேகர், அருள் ,ஆதித்தன் ,ராஜீ, வெற்றிவேல், ராஜேந்திரன், முருகன்,வெங்கடகிருஷ்ணன், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், ராதா, சரவணன் உட்பட வன்னியர் சங்க, பா.ம.க.,மாவட்ட,ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE