சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலத்தில் பா.ம.க., போராட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
கண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர்கள் ரமேஷ், சக்திவேல், சிவசங்கரன், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ் மாவட்ட துணை

கண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய பா.ம.க., செயலாளர்கள் ரமேஷ், சக்திவேல், சிவசங்கரன், எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ் மாவட்ட துணை செயலாளர் இளங்கோவன், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் தர்மன் ஆகியோர் பேசினர்.பின் கண்டமங்கலம் பி.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு அளிக்கச் சென்றனர். அப்போது அலுவலகத்தில் பி.டி.ஓ., இல்லை என்பதால் புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர், இது குறித்து போலீசார் பி.டி.ஓ., க்களுக்கு மொபைல் போன் மூலம் தகவல் தெரிவித்தனர். காலை 11.15 மணிக்கு பி.டி.ஓ.,க்கள் பிரபாகரன், நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. நிர்வாகிகள் பி.டி.ஓ.,க்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X