மூங்கில்துறைப்பட்டில் கரும்பு டிராக்டர்களால் விபத்து அபாயம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் கரும்பு டிராக்டர்களால் விபத்துகள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு, நான்கு முனை சந்திப்பு பகுதியில், திங்கட்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். மேலும் இந்த நான்கு முனை சந்திப்பு வழியாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு டிராக்டர்கள் செல்கின்றன.இதனால்,

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு நான்கு முனை சந்திப்பில் கரும்பு டிராக்டர்களால் விபத்துகள் தொடர்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.மூங்கில்துறைப்பட்டு, நான்கு முனை சந்திப்பு பகுதியில், திங்கட்கிழமை தோறும் வார சந்தை நடைபெறும். மேலும் இந்த நான்கு முனை சந்திப்பு வழியாக கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு டிராக்டர்கள் செல்கின்றன.இதனால், இப்பகுதியில் திங்கட்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். கரும்பு டிராக்டர்களும் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இதன் காரணமாக அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.இதுவரை 100க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் வார சந்தை நடைபெறும் இடத்தை மாற்ற வேண்டும்.நான்கு முனை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை அருகே பஸ்கள் நிறுத்தப்பட வேண்டும். பொரசப்பட்டு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X