கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ., அலுவலகங்கள் முன்பு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க.,சார்பில் போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சியில் பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் அய்யாக்கண்ணு, அய்யப்பன், அன்பரசு, மணிகண்டன் தலைமையில், நகர தலைவர் மணிகண்டன், அமைப்பு செயலாளர்கள் மணி, நாராயணன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் ரமேஷ், துணை தலைவர் பாண்டியன், இளைஞரணி துணை செயலாளர் தமிழரசன் சிறப்புரையாற்றினர்.திருக்கோவிலூர்முன்னாள் மாவட்ட செயலாளர் செழியன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ராஜ்குமார், துரைசாமி, ரமேஷ் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் தங்கஜோதி, மாவட்ட செயலாளர் பாலசக்தி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் சுடரொலிசுந்தர், தொகுதி அமைப்பு செயலாளர் சரவணகுமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்தியாகதுருகம்மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், மகேஸ்வரன், நகர செயலாளர் முருகன், மாநில நிர்வாகிகள் செந்தில்குமார், மணி, நகர நிர்வாகி அய்யப்பன், சக்திவேல், சீனிவாசன், சதீஷ், அருள், ஜெயராமன், தங்கராஜ், கொளஞ்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.சங்கராபுரம் மாவட்ட அமைப்பு செயலாளர் பப்லு தலைமையில், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை தலைவர் கோவிந்தராசு, வேல்முருகன், பழனிவேல், குணசேகரன், கண்ணன்,ராஜா, பிரபு,மகேந்திரன், மணிவண்ணன், தங்கராசு, ராமு,அருள், பெரியசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். நகர செயலாளர் ஜெகன் ஆகியோர் பங்கேற்றனர்.ரிஷிவந்தியம்பகண்டைகூட்ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பழனி, மாநில துணை தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவரணி செயலாளர் ராஜா பங்கேற்றார். பின் பி.டி.ஓ., இந்திராணியிடம் மனு அளித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அமுல்ராஜ், மணி, ராஜேஷ், சங்கர், வன்னியர் சங்க நிர்வாகி சரவணன், வேல்முருகன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE