கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.32 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. இதனால், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் அதிகளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது பஞ்சுகள் அறுவடை செய்யப்பட்டு வருவதால் பருத்தி வார சந்தை துவங்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் நடக்கும் பருத்தி வார சந்தைக்கு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலர் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு 309 விவசாயிகள் 2,075 பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு எடுத்து வந்தனர். பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பஞ்சுகளுக்கு விலை நிர்ணயம், அதிகபட்சம் ரூ.5,909க்கும், குறைந்தபட்சம் ரூ.4,207 க்கும் விலை போனது. எல்.ஆர்.ஏ., ரகத்தை சேர்ந்த 2,075 பஞ்சு மூட்டைகளும் 32 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE